அரியர் தேர்வுகள் ரத்து முடிவை AICTE ஏற்காதது உண்மையே – துணைவேந்தர் சூரப்பா பரபரப்பு தகவல்!!

0

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அரியர்ஸ் தேர்வுகள் ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் (AICTE) கடிதம் எழுதியது உண்மையே என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். அவ்வாறு கடிதம் எதுவும் வரவில்லை என அமைச்சர் அன்பழகன் மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில் துணைவேந்தர் சூரப்பா இவ்வாறு கூறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அரியர் தேர்வுகள் ரத்து:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இறுதிப்பருவ தேர்வுகளை தவிர்த்து மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து இருந்தார். மேலும் அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி இருந்த மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனால் பல ஆண்டுகளாக அரியர் தேர்வுகளை எழுதி வந்த லட்சக்கணக்கான மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இத்தகைய முடிவை எடுத்த முதல்வரை வாழ்த்தி போஸ்டர், பேனர் என அமர்களப்படுத்தினர்.

இந்நிலையில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்த முடிவினை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் (AICTE) கூறி உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகியது. மேலும் இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு AICTE கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் விளக்கம் ஒன்றை வெளியிட்டார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

KP Anbalagan
KP Anbalagan

அதில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தனது கருத்தை AICTE கருத்தாக கூறி வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் அம்மாதிரியான கடிதம் எதுவும் வரவில்லை என தெரிவித்தார்.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி – அமைச்சர் அறிவிப்பு!!

இந்நிலையில் AICTE கடிதம் அனுப்பியது உண்மையே என சூரப்பா கூறி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரியர் மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்சி அளித்தால் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என AICTE கூறியதாக தெரிவித்து உள்ளார். மேலும் கடிதம் வரவில்லை என அமைச்சர் மறுப்பு தெரிவித்தது குறித்து ஒன்றும் கூற முடியாது என தெரிவித்தார். அரியர் தேர்வுகள் ரத்து குறித்து மாறிமாறி புதுப்புது அறிவிப்புகள் வெளியாவது மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here