தேங்காய் எண்ணெயில் இவ்வளவு நன்மைகளா?? மிஸ் பண்ணாம படிங்க!!

0
coconut oil
coconut oil

வீட்டில் எளிமையாக கிடைக்கும் பொருட்களை விட்டுவிட்டு நாம் ஆடம்பர பொருட்களையே வாங்கி வீணாக்கி வருகிறோம். எளிதாக கிடைக்கும் சில பொருட்களின் நன்மைகள் நமக்கு தெரிவதில்லை. அந்த வகையில் தேங்காய் எண்ணையின் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

தேங்காய் எண்ணெய் நன்மைகள்:

அனைவரின் வீட்டிலும் கட்டாயமாக இருக்கும் பொருள் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். இது எளிதாக கிடைக்க கூடிய ஒன்று. அதனால் தான் இதன் அருமை பலருக்கு தெரிவதில்லை. இப்பொழுது தேங்காய் எண்ணையில் உள்ள நன்மைகளை பாப்போம் வாங்க.

  • தேங்காயில் உள்ள சாச்சுரேட்டட் என்ற கொழுப்புகள் சருமத்தின் அடியில் சென்று தங்கி சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்ளும்.
  • மேலும் தேங்காய் எண்ணெய்யை தடவுவதால் சருமத்தில் அழுக்குகள் சேராமல் இருக்கும். ஏனெனில் தேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் ஏ மற்றும் புரோடீன்கள் அதிகம் உள்ளதால் சருமத்தை நல்ல மிருதுவாக்கும்.
  • இரவில் தூங்கும்போது மேக்கப் கலைத்துவிட்டு தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தேய்த்து படுத்தால் சருமம் இயற்கையாகவே நல்ல பொலிவு பெரும்.
  • மேலும் தேங்காய் எண்ணெய் மூலம் வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
  • இரவில் தூங்க செல்லும் முன் தேங்காய் எண்ணெய் உடன் கற்றாழை கலந்து முகத்தில் தேய்த்து காலையில் கழுவி வந்தால் சரும பிரச்சனைகள் சரியாகும்.

இவ்வாறு நாம் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது செய்து வந்தால் கண்டிப்பாக சருமத்தில் இயற்கையான அழகை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here