ஆதார் இருந்தால் போதும் 10 நிமிடத்தில் பான் கார்டு – விண்ணப்பிக்கும் முறை!!

0
ahaar card linked with pan
ahaar card linked with pan

வரி, பணப் பரிமாற்றங்கள், கடன்கள், முதலீடுகள், நிலம் வாங்குதல் மற்றும் விற்றல் மற்றும் வரி கட்டுபவரின் இதர செயல்பாடுகளின் பல ஆவணங்கள் மற்றும் தகவல் போன்றவற்றை பான் கார்டு மூலம் கண்காணிக்கலாம். இதனால் வரி ஏய்ப்புகளை தடுக்க முடியும். பான் கார்டு பெற நாமே ஆன்லைனின் மூலம் விண்ணப்பித்து பெறும் முறையை வருமானவரித்துறை தொடங்கியுள்ளது.

பான் கார்டு:

முன்பெல்லாம் பான் கார்டுகள் பெற வேண்டுமானால் இரண்டு பக்க விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். இதற்காக சில தினங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது இதற்கான எந்த அவசியமும் இல்லை. உங்களிடம் ஆதார் கார்டு இருந்தால் போதும் இலவசமாக பான் கார்டினை 10 நிமிடத்தில் பெற்றுவிடலாம்.

விண்ணப்பிப்பது எப்படி??

pan online apply
pan online apply
  • முதலில் வருமானவரி துறை இணையத்தளத்திற்குள் சென்று இடப்புறமாக இருக்கும் குயிக் லிங்க் பகுதியில் உள்ள “Instant PAN through Aadhaar” என்ற இணைப்பை தொடவும்.
  • அதன்பின் ‘Get New PAN’ என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது புதிய பக்கம் திறக்கும்.
  • பிறகு உங்கள் ஆதார் எண்ணை அதில் உள்ளிட வேண்டும் . அதன்பின் கேப்சாவை உள்ளிடவும்.
  • இப்பொழுது உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒடிபி வரும். அந்த ஒடிபி எண்ணை அதில் உள்ளிடவும்.
  • பிறகு ஆதார், மற்றும் இ- மெயில் போன்றவற்றை சரிபார்க்கவும்.
  • இப்பொழுது கேஒய்சி மூலம் ஆதார் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு பான் எண் ஒதுக்கப்படும். இந்த செயல்களுக்கு அதிகபட்சமாக 10 நிமிடங்கள் ஆகும்.
pan link
pan link

மேலும் நீங்கள் மின்னஞ்சல் முகவரி அளித்திருந்தால் அந்த முகவரிக்கு உங்கள் பான் கார்டு பிடிஎப் வடிவில் அனுப்பப்படும். இல்லையெனில் “Check Status/ Download PAN” என்ற பக்கத்தில் உங்களின் பான் கார்டை பிடிஎப் வடிவில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை. எளிதில் 10 நிமிடங்களில் எளிதான முறையில் பான் கார்டை பெற்றுவிடலாம். 18 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here