Monday, May 6, 2024

ஆசிரியர்களுக்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு – கல்வித்துறை புதிய அறிவிப்பு!!

Must Read

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான வயது வரம்பு கல்வித்துறையால் குறைக்கப்பட்டுள்ளது. முதலில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களும் பணியில் நியமிக்கப்பட்டனர். ஆனால், இனி 40 வயது கடந்திருந்தால் பணியில் நியமிக்கபட மாட்டார்கள் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

கல்வித்துறையில் சீர்திருத்தம்:

தமிழக கல்வித்துறை பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது. கடந்த சில வருடங்களாக ஆசிரியர்களுக்கான வயது வரம்பு 58 ஆக இருந்தது. 58 வயது நிரம்பாதவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், தற்போது இதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் ஆசிரியர்களுக்கான பணி நியமன வயது 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

Elementary-Teacher3
Teacher

காரணம், ஆசிரியர்களுக்கு 58 வயதினை ஓய்வு பெரும் வயதாக அறிவித்ததால் சிலர் 40 வயதிற்கு பின் தான் பணியில் சேர்கின்றனர். ஒரு சில வருடங்கள் மட்டுமே பணியினை செய்து விட்டு அவர்கள் ஓய்வு பெரும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்களிடம் இருந்து வேலையினை சரியாக வாங்க முடிவதில்லை. அரசுக்கு தேவையில்லாத வீண் செலவு தான் ஏற்படுகிறது.

புதிய சீர்திருத்தம்:

இதன் காரணமாக தான் இந்த சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் வரும் காலங்களில் வட்டார ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் 40 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் முதல் RTGS சேவை 24 மணிநேரமும் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

இந்த புதிய சீர்திருத்தம் உடற்கல்வி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர் என்று அனைவருக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இனி இதனை பின்பற்றி தான் பணி நியமனம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -