சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள் – ஜாதவ் வெளியே, ஜெகதீசன் உள்ளே!!

0

ஐபிஎல் 2020 தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சொதப்பி வரும் கேதார் ஜாதவை வெளியேற்றி, தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

2020ம் ஆண்டில் பல நம்ப முடியாத விஷயங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஐபிஎல் தொடர் ஒன்றும் விதிவிலக்கல்ல. ஆம், பல முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் எளிதில் வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் கூட கடைசி நேரத்தில் பேட்டிங்கில் சொதப்பி தோல்வியை தழுவுகிறது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மிக மோசமாக உள்ளதே இதற்கு முக்கிய காரணம். மேலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பும் கேதார் ஜாதவை ஒவ்வொரு முறையும் அணியில் எடுப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் அனுபவம் வாய்ந்த வீரர்களை விட, அசுர பலத்துடன் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அப்படி இருக்கையில் தமிழக வீரர் ஜெகதீசன் போன்ற இளம் வீரர்களை களமிறக்காமல், கேதார் ஜாதவ் போன்றவர்களை விளையாட வைப்பதே தோல்விக்கு முக்கிய காரணம்.

இந்த தொடரில் தோனியின் கேப்டன்ஷிப் மீதும் ரசிகர்களுக்கு மிகுந்த அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. போட்டியின் கடைசி நேரத்தில் வெற்றி பெற நிறைய ரன்கள் தேவைப்படும் போது சுத்தமாக பார்மில் இல்லாத ஜாதவை களமிறக்குவது எந்த வகையில் பொருந்தும். கடைசி போட்டியிலும் எளிமையாக வெற்றி பெற வேண்டிய சென்னை அணி, 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே அடித்த ஜாதவ் காரணமாக 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதனால் ஜாதவை டீமை விட்டு தூக்க வேண்டும் என்கிற கோரிக்கை ரசிகர்கள் மத்தியில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அவருக்கு பதிலாக ரூதுராஜ் கெய்காவாட், TNPL போட்டியின் நாயகன் ஜெகதீசன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என கூறி வருகின்றனர். மேலும் மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்த தோனியும் பொறுப்புடன் ஆட வேண்டியது அவசியம். இதனால் இன்றைய போட்டியில் சில மாற்றங்கள் அணியில் கொண்டு வரப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மறுபுறம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடந்த 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை படிக்கல், ஏபி டி வில்லியர்ஸ், விராட் கோஹ்லி, ஆரோன் பின்ச் என அதிரடி வீரர்கள் உள்ளனர். ஆர்சிபி அணி பவுலிங்கில் சிறிது கவனம் செலுத்த வேண்டி உள்ளது. வாஷிங்டன் சுந்தர், சஹால் போன்றவர்கள் சிறந்த பார்மில் உள்ளது அணியின் பலத்தை அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here