டிசம்பர் முதல் RTGS சேவை 24 மணிநேரமும் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

0
RBI Governor Shaktikanta das
RBI Governor Shaktikanta das

நாடு முழுவதும் வரும் டிசம்பர் மாதம் முதல் RTGS சேவை 24 மணிநேரமும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் அறிவித்து உள்ளார். இந்த சேவை ஒரு வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மிகப்பெரிய தொகையை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிக்கொள்கை குழு கூட்டம்:

ரிசர்வ் வங்கி சார்பில் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை குழு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இம்முறை கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள், ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக நீடிக்கும் என தெரிவித்தார். மேலும் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவடையும் எனவும் கூறினார். அதுமட்டுமின்றி பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டன.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

தற்போது வரை ஒரு வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பெரிய தொகையை அனுப்ப நெப்ட் (NEFT) முறை பயன்படுத்தப்படுகிறது. ஆண்டு முழுவதும் கிடைக்கும் இச்சேவையில் அதிகபட்சம் 2 லட்ச ரூபாய் வரை மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும். அதற்கு மேற்பட்ட தொகையை அனுப்ப RTGS முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இம்முறையில் சில சிக்கல்கள் உள்ளன.

அதவாது வங்கி வேலைநாட்களில் மட்டுமே இச்சேவை கிடைக்கும். அதுவும் காலை 7 மணிமுதல், மாலை 6 மணிவரை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் வாடிக்கையாளர்கள் சிக்கல்களை அனுபவிப்பதை தவிர்க்கவும், ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் ரிசர்வ் வங்கி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வரும் டிசம்பர் மாதம் முதல் 24 மணிநேரமும் RTGS சேவை கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

RTGS முறை சில நாடுகளில் மட்டுமே 24 மணிநேரமும் கிடைக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு ஜூலை முதல் NEFT மற்றும் RTGS முறைகளுக்கு சேவை கட்டணத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here