Monday, May 6, 2024

இளம்பருவத்தினரை அதிகமாக தாக்கும் “நோமோபோபியா” – ஆய்வில் அதிர்ச்சி!!

Must Read

“நோமோபோபியா” என்ற நோய் பாதிப்பு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் இளம்பருவத்தினரை அதிகமாக தாக்குகிறது என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோமோபோபியா என்பது..??

நோமோபோபியா என்பது ஒரு மனநல பாதிப்பாக ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. nomophobia (fear of losing mobile) இதில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை இழப்பதற்கு மிகவும் பயப்படுவர்.

ஊரடங்கின் போது கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க திட்டம்!!

nomophobia
nomophobia

அவர்களால் தங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி அவர்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அவர்கள் மிகுந்த பதட்டம், பயம் மற்றும் மனஉளைச்சலுக்கு ஆளாகுவர். இந்த நோமோபோபியாவால் அவர்கள் தூக்கமின்மை போன்ற பல உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரும் என்று சொல்லப்படுகிறது.

ஆய்வில் தகவல்:

தற்போது இது குறித்த ஆய்வு ஒன்றை லிட்டில் ராக் ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டேவிட் மாஸ்டின், ப்ரூஸ் மூர் மற்றும் அவர்களது இளங்கலை மாணவர்கள் கொண்ட குழு மேற்கொண்டது. இதில் 300க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஸ்மார்ட்போன் கொடுக்கப்பட்டது.

அதில் அவர்களது தூக்கநேரம், அவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரம் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாததால் ஏற்படும் உடல் மற்றும் மனமாற்றங்கள் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 89 சதவீதத்திற்கும் அதிகமானோர் “நோமோபோபியா” பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அவர்களால் தங்களது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாமல் இருக்க முடிவதில்லை. அப்படி தொடர்ச்சியாக அவர்கள் பயன்படுத்துவதால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

எப்படி குறைத்துக்கொள்ளலாம்??

இதற்கு தீர்வாக ஆராச்சியாளர்கள் கூறியதாவது ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் நேரத்தை குறைத்து கொள்ள வேண்டும் அதிலும் முக்கியமாக தூங்கும் நேரத்தில் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்றும் கூறுகின்றனர். இது பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தினரிடம் தான் அதிகமாக காணப்படுகிறது என்பதால் அவர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்றும் சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைத்தால் மட்டுமே இதில் இருந்து மீண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா மும்பை?? SRH அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

IPL தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 55 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -