முகத்தை கழுவும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் – பியூட்டி டிப்ஸ் இதோ!!

0
face wash
face wash

முகத்தை நாம் கழுவும்போது சில தவறுகளை நம்மை அறியாமலே செய்கிறோம் இதனால் தான் முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் வராமல் இருக்க சிலவற்றை செய்யக்கூடாது.

சரும பிரச்சனைகள்

முகத்தை அழகாக வைத்துக்கொள்ள பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் அதிகம் விரும்புவர். நாம் முகத்தை பராமரிக்க பல வழிமுறைகளை கையாளுகிறோம். அனால் சரியான முறையில் கையாளுவதில்லை. விளம்பரங்களில் காட்டப்படும் அனைத்தையும் பயன்படுத்துகிறோம். இது சிலருக்கு சேராது. மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்பொழுது நாம் முகத்தை கழுவும்போது என்ன என்ன பின்பற்ற வேண்டும் என பார்க்கலாம்.

face wash
face wash

முதலில் முகத்தை குளிர்ந்த நீரிலேயே கழுவ வேண்டும். முகத்தை கழுவும் முன் கைகளை நன்கு கழுவி கொள்ள வேண்டும். இதனால் முகம் புத்துணர்ச்சி அடையும். சுடு நீரில் முகத்தை கழுவுவது தவறான ஒன்று இது முகத்தை பாதிக்கும். முகம் கழுவியதும் மென்மையான துண்டை கொண்டு முகத்தை இதமாக துடைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 4 முறையாவது முகத்தை கழுவ வேண்டும்.

face wash
face wash

மேக்கப் செய்திருந்தால் ஃபேஷ் வாஷை பயன்படுத்தி மேக்கப்பை அழித்துவிட்டு பிறகு முகத்தை கழுவ வேண்டும். ஏனென்றால் வெறும் நீரில் கழுவுவதால் மேக்கப் நன்றாக போகாது. அங்கங்கே இருக்கும் இதனால் சருமத்தில் எரிச்சலை உண்டுபண்ணும்.

face wash
face wash

சிலருக்கு கெமிக்கல் பொருட்கள் சேராது. இதனால் மேக்கப் போடாமலே இருப்பர். இதற்கு பால் அல்லது தயிரை முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு அவ்வப்போது செய்து வர வேண்டும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி விடும்.

face wash
face wash

முகத்தை மென்மையாக கழுவ வேண்டும். சுரண்டுவது, அழுத்தி தேய்ப்பது போன்றவை கூடவே கூடாது. இந்த செய்கைகளால் கிருமிகள் முகத்தில் பரவ வாய்ப்புள்ளது. இதனால் சருமம் பாதிப்படையும். முகத்தை துடைக்க துண்டுகளை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வேறொருவரின் துண்டுகளை பயன்படுத்துவதால் கூட முக பிரச்சனைகள் ஏற்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here