ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை – 9ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு..!

0

நாடெங்கிலும் தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் பள்ளி கல்லூரிகள் விடுப்பு வழங்கியதால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தற்போது ஆன்லைன் வகுப்புகளில் கலந்துக்கொள்ள முடியாததால் பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவி

நாடெங்கிலும் பொது முடக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆன்லைன் வகுப்பில் கலந்துக்கொள்ள முடியாததால் தற்கொலை செய்து கொண்டார்.

Panipat News In Hindi : student suicide in jind sports school ...

இது குறித்து அவர் தந்தை கூறுகையில், “எங்கள் வீட்டில் டிவி இருக்கிறது. ஆனால் பழுதடைந்ததாக டிவி உள்ளது. அதனை ரிப்பேர் செய்து தருமாறு எனது மகள் என்னிடம் கூறினார். ஆனால் பழுது நீக்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எதற்காக உயிரை விட்டாள் என்று தெரியவில்லை. அவள் என்னிடம் சொல்லியிருந்தால், நண்பர் வீட்டிற்கு நான் அழைத்து சென்றிருப்பேன். அங்கிருந்து அவரால் பாடம் கற்றிருக்க முடியும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மன உளைச்சல்

அந்த பெண்ணின் தாய்க்கு இப்பொழுது தன ஒரு குழந்தை பிறந்துள்ளது. மாணவியின் குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், இதனால் தன்னால் மேலும் படிக்க முடியாது என்று மாணவி கருதியதாக கூறப்படுகிறது. டிவி அல்லது ஆன்லைன் மூலம் பாடம் கற்க முடியாததால் மாணவி மன உளைச்சலில் இருந்தார் என்றும் அவர்கள் கூறினர்.

Youth suicide rates are on the rise in the U.S. | PBS NewsHour

இவர்களை போல 2.50 லட்சம் பேர் டிவி மற்றும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த முடியாத சூழலில் இருக்கின்றனர். இந்த மாணவியின் தற்கொலை குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் உத்தரவிட்டுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here