இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் பெயர், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
விளையாட்டுத் துறை:
இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கென வழங்கப்படும் உயரிய விருதுகள் ஆன கேல்ரத்னா, அர்ஜூனா ஆகியவற்றிற்கு தகுதியான வீரர் மற்றும் வீராங்கனைகள் பெயரை சம்மந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டுத் துறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்து வருகின்றன. இதற்கு வரும் வியாழக்கிழமை (ஜூன் 4) கடைசி நாளாகும். இந்நிலையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் பெயர், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இவர் ஏற்கனவே 2016ல் அர்ஜுனா விருதும், 2020ல் பத்ம ஸ்ரீ விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தலைமையில் இந்திய ஹாக்கி அணி 2017ல் ஆசியக் கோப்பையும், 2018ல் ஆசிய போட்டிகளில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளது. மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற இவர் முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |