டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி உட்பட 3 மாநிலங்களின் தலைவர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். பாஜக தலைமை எடுத்த இந்த அதிரடி முடிவால் தொண்டர்களிடையே பரபரப்பு நிலவுகிறது.
பாஜக தலைவர்கள் மாற்றம்:
போஜ்புரி மொழி பாடகர் மற்றும் நடிகரான மனோஜ் திவாரி 2016ம் ஆண்டு முதலே டெல்லி பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார். இதற்கிடையே டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக படும் தோல்வியை தழுவிய நிலையில், மனோஜ் திவாரி தனது பதவியை ராஜினாமா செய்ய தானாக முன்வந்தார். இதனை ஏற்க மறுத்த பாஜக மேலிடம் திவாரியை தொடர்ந்து தலைவராக நீடிக்க வைத்தது. இந்நிலையில் இன்று அவர் மாற்றப்பட்டு உள்ளார்.
மனோஜ் திவாரிக்கு பதிலாக டெல்லி பாஜக தலைவராக முன்னாள் வடக்கு டெல்லி மாநகராட்சி மேயரான, ஆதேஷ் குமார் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளார். அதுமட்டுமின்றி மணிப்பூர் மாநில பாஜக தலைவராக திகேந்திர சிங் மற்றும் சத்தீஸ்கர் மாநில தலைவராக விஷ்ணு தியோ சாய் ஆகியோர் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவுகளை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பிறப்பித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |