தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – இனி குடிமகன்களுக்கு 2 ஃபுல் மட்டுமே!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் காரணமாக ஏப்ரல் 6ம் தேதி வரை குடிமகன்களுக்கு 2 ஃபுல் மட்டுமே வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் மிக தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறையும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி பணத்தை கொண்டு செல்பவர்களை பறக்கும் படையினர் மடக்கி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது புதிய விதிமுறையாக தேர்தல் ஆணையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் காரணமாக வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி வரை நபர் ஒன்றுக்கு 2 ஃபுல் மட்டுமே விற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாறாக 4 ஆஃப் அல்லது 8 குவாட்டர் வழங்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

‘கொரோனா எதிரொலியாக 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை’ – யுனிசெப் நிறுவனம் அறிவிப்பு!!

மேலும் இதுதொடர்பான தெளிவான அறிக்கைகளை தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனை நிலைய விற்பனையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது இந்த அறிவிப்பினால் தமிழ்நாடு குடிமகன்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலு இதன்மூலம் தொண்டர்களுக்கு சரக்கு பாட்டில்களுடன் பிரியாணி பொட்டலம் கொடுப்பது தடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here