‘அஜித் கற்றுக்கொடுத்தது போல பைக் ஓட்டி கைத்தட்டல் வாங்கினேன்’ – நடிகை ஹுமா குரேஷி பேட்டி!!

0

‘வலிமை’ படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்து வரும் நடிகை ஹுமா குரேஷி, ‘இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜீத் சொல்லி கொடுத்தது போல பைக் ஒட்டி கைத்தட்டல் வாங்கினேன்’ என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை ஹுமா குரேஷி

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் இப்படத்தின் வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் குறித்து எந்த வித அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக இப்படத்தில் நடிகர் அஜீத்துடன் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை ஹுமா குரேஷி தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு நடிகை ஹுமா குரேஷி அளித்துள்ள பேட்டியில், ‘கிரேட் ஹீரோவின் (ரஜினிகாந்த்) ஹீரோயின் என்பதால் தான், தல அஜீத் என்கிற மாஸ் ஹீரோவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. உடனே ஓகே சொல்லிவிட்டேன்.

‘கொரோனா எதிரொலியாக 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை’ – யுனிசெப் நிறுவனம் அறிவிப்பு!!

பைக் ஓட்டுவதில் மிகப்பெரிய கில்லாடி அஜீத் சார். நான் சும்மா ஆக்ட் தான் கொடுத்தேன். படத்திற்காக பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன். பைக் ஓட்டுவது பற்றி அஜீத் எனக்கு சில டிப்ஸ் கொடுத்தார். அவர் சொன்னது போல பைக் ஓட்டி கைத்தட்டல் வாங்கினேன்’ என கூறியுள்ளார். 34 வயதான பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, முன்னதாக நடிகர் ரஜினிகாந்துடன் ‘காலா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here