ஜெயலலிதா மடியில் இருக்கும் ‘மாஸ்டர்’ நாயகி – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராக இருந்த விஜே ரம்யா மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது தனது சிறு வயதில் ஜெயலலிதாவுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜே ரம்யா

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ தொகுப்பாளராக இருந்தவர் விஜே ரம்யா. இவரது பேச்சு திறனால் மக்களை கவர்ந்திழுத்தார். மேலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கினார். விஜே ரம்யா தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மேலும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் விஜே ரம்யா. அதன் பிறகு இவர் முழு நேரமும் திரைப்படங்களில் சைடு ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவருக்கு விஜய் டிவியிலும் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எப்போதாவது ஒருமுறை தான் இவரை தொகுப்பாளராக பார்க்க முடிந்தது. மேலும் இவருக்கு திருமணம் நடைபெற்று சில வருடங்களிலேயே முறிவில் முடிந்தது. கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். தற்போது விஜே ரம்யா கடைசியாக நடித்த திரைப்படம் மாஸ்டர் தான். அந்த படத்தில் ‘ஜேடி ஸ்டுடென்ட் இல்லமா ப்ரொஃபஸர்’ என்ற டயலாக் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – இனி குடிமகன்களுக்கு 2 ஃபுல் மட்டுமே!!

விஜே ரம்யாவிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜெயலலிதாவுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவரின் சிறு வயதிலேயே அவரது அப்பா அட்வோகேட்டாக இருந்ததாகவும், தன்னை ஜெயலலிதா மடியில் வைத்து காபி கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here