தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 120 பேர் பலி!!

0

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 120 பேர் உயிரிழந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை இம்மாத தொடக்கத்தில் இருந்து மிக அதிகமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஜூலை மாதம் முழுவதுமே 1500 க்குள் உயிரிழப்புகள் பதிவான நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 15ம் தேதிக்குள் 1500க்கும் மேற்பட்ட மரணங்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் இன்று முதல் விண்ணப்பிக்கும் அனைவரும் இ பாஸ் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

corona activities in TN
corona activities in TN

இந்நிலையில் நாளை முதல் சென்னையில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர். இன்று தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,945 ஆக அதிகரித்து உள்ளது.

செப்டம்பர் 6 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இன்று சென்னையில் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 1,17,839 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,667 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,83,937 ஆக உயர்ந்து உள்ளது. இன்று மட்டும் 120 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 5,886 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here