விநாயகர் சிலையை உடைத்த பெண் – பக்ரைனில் பரபரப்பு..!

0

பக்ரைன் நாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அந்நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் உடைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பக்ரைன்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்ட் 22 இல் நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்படும். இதனால் அந்நாளில் விநாயகர் சிலைகளை வாங்கி பூஜை செய்வது வழக்கம். மேலும் இதனை தொடர்ந்து பக்ரைன் நாட்டில் 4 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். மேலும் 2010 கணக்கெடுப்பின் படி 9.8 சதவீத இந்துக்கள் அங்க வாழ்கின்றனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அந்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். அதனை தொடர்ந்து பக்ரைன் நாட்டின் மனமாவின் புறநகர் பகுதியான சூஃபைர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் விநாயகர் சிலைகள் விற்கப்பட்டுள்ளது. அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு வருகை தந்த இரண்டு பெண்கள் கோவமுற்று அந்த விநாயகர் சிலையை உடைந்துள்ளனர். மேலும் இது நபிகள் பிறந்த மண், இதற்கு நபிகள் அனுமதிப்பாரா?? என்று கத்தியுள்ளார். மேலும் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. அதனால் அந்த பெண்ணை கைது செய்யும்படி குரலெழுப்பி வருகின்றனர்.

உள்துறை அமைச்சகம்

இந்த சம்பவத்தை அடுத்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக அந்த விடடீயோவை பொலிஸார் ஆராய்ந்தனர்.

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 120 பேர் பலி!!

54 வயதான அந்த பெண் விநாயகர் சிலையை வேண்டும் என்றே சேதப்படுத்தியுள்ளார். மேலும் இது விசாரணைக்கு உட்படுத்தப்படும். மத துவேசத்தை பரப்பும் செயல் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here