Sunday, May 5, 2024

பாஜக கூட்டணி தொடரும், நாளை முதல் பரப்புரை – தேர்தல் களத்தில் முதல்வர் பழனிசாமி!!

Must Read

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் அதிமுக மத்திய ஆளும் கட்சியான பாஜவுடன் தான் கூட்டணி அமைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதே போல் தேர்தலுக்காக நாளை முதல் பரப்புரையை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் களம்:

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் போட்டியிடவும் உள்ளனர். இதன் காரணமாக தேர்தல் களம் சமீப நாட்களில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இதனை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் தேர்தல் குறித்த பணிகளில் இறங்கினார். முதல் கட்டமாக நடிகர் கமல்ஹாசனுக்கு சூடான பதிலடிகளை வழங்கினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இன்று நிருபர்களை சந்தித்து பேசும்போது, “நாளை முதல் எடப்பாடி தொகுதியில் இருந்து தேர்தலுக்கான பரப்புரைகளை தொடங்க உள்ளேன். தேர்தலுக்கு நாட்கள் மிக குறைவாக தான் உள்ளது. சட்டசபை தேர்தலிலும் பாஜ கட்சியுடனான கூட்டணி தொடரும்” என்று தெரிவித்தார். பின், தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மின்சார துறையை தனியார் மயமாக்கும் எந்த ஒரு எண்ணமும் இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மாநில அரசு சார்பில் இடம் அளிக்கப்பட்டு விட்டது. அதனை மத்திய அரசு துறை அதிகாரிகள் முறையாக வாங்கவில்லை”

டிச.24 முதல் ஜன.3 வரை ‘இலவச தரிசன டிக்கெட்’ கிடையாது – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

“சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம் வருத்தமளிக்கிறது. விலையினை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சில நிறுவங்களின் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவு தான் பின்பற்றப்படுகிறது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -