Saturday, April 20, 2024

டிச.24 முதல் ஜன.3 வரை ‘இலவச தரிசன டிக்கெட்’ கிடையாது – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

Must Read

திருப்பதி தேவஸ்தானம் தற்போது வரும் 24 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களுக்கு இலவச டிக்கெட் கிடையாது என்று அறிவித்துள்ளது. வரும் வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி முதல் முறையாக பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வைகுண்ட ஏகாதேசி விழா:

தமிழ் மாதமான மார்கழி துவங்கியுள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தானம் முதல் முறையாக வரும் 25 ஆம் தேதி முதல் 3 வரை மக்கள் சொர்க்கவாசல் வழியாக செல்லலாம் என்று தெரிவித்துள்ளது. அரசு பதவிகளில் உள்ள பிரமுகர்கள் வரும் 25 ஆம் தேதி அதிகாலை 3 ஆம் முதல் சொர்க்கவாசல் வழியாக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி முக்கிய பிரமுகர்கள் நேரடியாக வந்தால் அவர்களுடன் மூன்று பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். நாடு முழுவதும் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் தினமும் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

உள்ளூர் மக்களுக்காக கோவிலில் 10 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு 10 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதே போல் வரும் 24 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இலவச டிக்கெட் அனுமதி வழங்கப்பட மாட்டாது. உள்ளூர் மக்கள் தங்களின் ஆதார் கார்டினை காட்டி தரிசனத்திற்காக டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம்.

சுங்கச்சாவடி இல்லாத இந்தியா – நிதின் கட்கரி அறிவிப்பு!!

பொதுமக்கள் அனைவருக்கும் தடையின்றி லட்டு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி மக்களுக்கு அன்னக்கூடத்தில் அதிகாலை 4 மணி முதல் 12 வரை உணவு வழங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. கூடுதலாக, அலிபிரி மற்றும் வாரிமெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு எந்தவித டிக்கெட்டுகளும் வழங்கப்பட மாட்டாது. இந்த விவரங்களை திருமலை தேவஸ்தானத்தின் செயலதிகாரி ஜவகர் நேற்று அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -