OLX இல் விற்பனைக்கு வந்த பிரதமர் அலுவலகம் – 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!!

0

நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அலுவலகம் OLX இல் விற்பனைக்கு என பதிவிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமரின் தொகுதி அலுவலகம்:

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொகுதியான வாரணாசியில் தொகுதி அலுவலகம் ஒன்று உள்ளது. மர்ம நபர்கள் சிலர் அந்த அலுவலகத்தை புகைப்படம் எடுத்து ஆன்லைன் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ் இல் ரூ.7 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்ததனர் . இந்நிலையில் புகைப்படம் எடுத்த அந்த 4 மர்ம நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் பின் ஓஎல்எக்ஸ் நிறுவனம் மூலம் அந்த பதிவை போலீசார் அளித்துள்ளனர். அதன்பின் இவர்கள் பதிவு செய்த ஐடி போலியானவை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாஜக கூட்டணி தொடரும், நாளை முதல் பரப்புரை – தேர்தல் களத்தில் முதல்வர் பழனிசாமி!!

கடந்த ஏப்ரல் மாதத்தில் 597 அடி உயரமுள்ள சர்தார் வல்லபாய் படேலின் உருவ சிலையை இதேபோல் புகைப்படம் எடுத்து ஓஎல்எக்ஸ் தளத்தில் ஒருவர் 30 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்போவதாக அறிவித்திருந்தார். அது மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here