உங்கள் சருமத்தை அழகாக பராமரிக்க உதவும் 10 குறிப்புகள் இதோ!!!

0

நாம் அனைவருமே நமது சருமத்தை எப்படி அழகாக பராமரிப்பது என்பதையே கனவாக கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்காக நாம் கடைகளில் கிடைக்கும் பல ரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்துவது என்பது நமது சருமத்தை பாழாக்கும் தவிர பராமரிக்காது.

சருமத்தை பராமரிக்கும் அடிப்படை விஷயங்களான அதிக நீர் அருந்துவது, கைகளால் முகத்தை அடிக்கடி தொடாமல் இருப்பது, போதுமான அளவு இரவில் தூங்குவது இவற்றை நாம் சரியாக செய்தாலே பாதி சரியாகி விடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சரும நிபுணர்கள் பரிந்துரைத்த சரும பராமரிப்பிற்கான சில முக்கிய குறிப்புகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

1. சரியான சோப் அல்லது பேஸ் வாஷ் பயன்படுத்துவது:

முதலில் நமது சரும வகைக்கு பொருத்தமான கிளன்சர் பயன்படுத்த வேண்டும். எண்ணெய் பசை மற்றும் முகப்புபரு  உள்ளவர்கள் சாலிசிலிக் ஜெல் அல்லது பென்சாயில் பெராக்சைடு  உள்ள சோப் அல்லது பேஸ் வாஷ்  பயன்படுத்த வேண்டும். உலர்ந்த மற்றும் முதிர்ந்த சருமத்தை உடையவர்கள் சருமத்தை ஈரப்பதமாக வைக்கும் கிளைகோலிக் அல்லது பாலை பயன்படுத்தலாம்.

2. அதிக பொருட்களை தவிருங்கள்:

நாம் நமது முகத்தில் அதிகப்படியான அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதால் நமது தோல் வறண்டு  நமது தோலின் இயற்கை தன்மை மாறிவிடும். இதனால் தேவை இல்லாத எதையும் நமது சருமத்தில் பூசக்  கூடாது.

3. சருமத்தின் ஈரப்பதம்:

நாம் தினமும் குளித்து முடித்ததும் மற்றும் தூக்க செல்வதற்கு முன்பும் நமது சருமத்தை ஈரப்பதமாக்க வேண்டும். சருமத்தின் ஈரப்பதம் முக்கியமான ஒரு விஷயமாகும். இதற்காக பாதிப்புக்கள் எதுவும் ஏற்படுத்தாத நல்ல மாயிச்சரைசர் பயன்படுத்தலாம்.

4. தேவை இல்லாமால் முகத்தை தொடுவதை தவிருங்கள்:

நமது கைகளில் இருக்கும் கிருமிகள் நாம் முகத்தை தொடுவதன் மூலமாக பரவிவிடுகிறது. இதன் மூலம் முகப்பருக்கள் வரும். எனவே முகத்தை கைகளால் தொடுவது தவிர்க்க வேண்டும்.

5. தண்ணீர்:

நாம் தினமும் குறைந்தது 8 டம்ளர் அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நமது சருமம் இளமையாக இருக்கும்.

டிச.24 முதல் ஜன.3 வரை ‘இலவச தரிசன டிக்கெட்’ கிடையாது – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!!

6. அதிக வெப்பம் ஆபத்து:

எப்போதும் அதிக வெப்பமான இடத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தின் அருகில் இருக்கும் போது நமது சருமம் அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறது. அதிக வெப்பமான இடத்தில்  இருந்து குறைந்தது 10 அடி  தள்ளி நிற்க வேண்டும்.

7. எக்ஸ்போலியேட்:

நமது தோலில்  தினமும் 50 மில்லியன்  செல்கள் வெளியேறுகின்றன. இதனால் நமது தோலானது வலுவிழந்து காணப்படும். எனவே நமது சருமத்திற்கு சரியான ph அளவுள்ள  கிரீம் களை பயன்படுத்தவேண்டும்.

8. பச்சை காய்கறிகள்:

நாம் நமது நாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தால் நமது சருமத்தின் ஆரோக்கியத்தை  இழக்க வேண்டியது தான். ஆதலால் நமது சருமத்திற்கு ஆரோக்கியத்தை பராமரிக்கும் பச்சை காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

9. ஊட்டச்சத்து:

நமது உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்குவது போல் நமது சருமத்திற்கும் தகுந்த ஊட்டச்சத்தை வழங்க வேண்டும். வைட்டமின் சி நிறைந்த சீரம் மற்றும் பழன்களையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

10. போதிய அளவு உறக்கம்:

நாம் தினமும் போதிய அளவு இரவில் உறங்க வேண்டும். இதனால் நமது மன அழுத்தம் குறைக்கப் பட்டு நமது சருமமும்  ஆரோக்கியமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here