எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய முதல்வர் – சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!!

0

தமிழக முதலமைச்சரான பழனிச்சாமி அவர்கள் தனது சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தனது அரசியல் பிரச்சாரத்தை தொடங்கினர்.

சட்டப்பேரவை தேர்தல்:

தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் அணி தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், தற்போது தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தனது அரசியல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

எடப்பாடியில் உள்ள பெரியசோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலில் வழிபாடு செய்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தமிழக முதல்வர். எடப்பாடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக அணி அதிகபட்சமாக 6 முறை வென்றுள்ளது. அதில் அதிகபட்சமாக பழனிச்சாமி 4 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

cmo of tamilnadu
cmo of tamilnadu

அதிலும் கடந்த 2016 ஆம் ஆண்டில் 99 ஆயிரம் வாக்குகளை பெற்று தனது வெற்றியை பதிவு செய்துள்ளார். இதனால் எடப்பாடி தொகுதி அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டிலே நடந்த நாடாளுமன்ற தேர்தலை திமுக அணி தனது வெற்றியை பதிவு செய்தது.

அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை!!

எனவே தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலில் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் பழனிச்சாமி களத்தில் இறங்கியுள்ளார். மேலும் இதுவே பழனிச்சாமி அவர்களுக்கு முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கும் முதல் தேர்தல் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here