அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – சவரன் ரூ.37,952 ஆக விற்பனை!!

0

இந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை கவலைக்கு உள்ளாக்கி வருகிறது. அடுத்ததாக தை மாதம் வர இருக்கிறது. பொதுவாகவே தை மாதம் முழுவதும் சுப விசேஷங்கள் அதிகமாக நடக்கும். சுப விசேஷங்கள் என்றாலே தங்க நகைகள் தான் அனைவரது விருப்பமும். இதனால் சுப காரியங்கள் நடத்த இருக்கும் பொது மக்கள் தங்கத்தின் விலை ஏற்றத்தை நினைத்து அதிக கவலையில் உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தளர்வுகளுடன் நடைபெற்று கொண்டிருக்கும் ஊரடங்கினால் பங்குச்சந்தையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது அதிக முதலீடுகள் உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

டாக்டராக ரீஎன்ட்ரி கொடுக்கும் துர்கா – அப்போ வெண்பாவிற்கு ஆப்பு நிச்சயம்!

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 21 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,744 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.192 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,952 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.71.50 க்கும், ஒரு கிலோ ரூ.71,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here