மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி – அனுமதி வழங்கியது அமெரிக்கா அரசு !!

0

உலகம் முழுக்க அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வந்தன. அவற்றுள் அமெரிக்காவை சேர்ந்த பைஸர் நிறுவனமும், மாடர்னா நிறுவனமும் முன்னணியில் இருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி மருந்துக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது மாடான நிறுவனமும் தற்போது  தனது தடுப்பூசிக்கு அனுமதி பெற்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக அனுமதி பெற்றிருந்த பைசர் நிறுவனத்தின்  மருந்து 90% பலனளிப்பதாகவும், மாடர்னா நிறுவனத்தின் மருந்து 95% பலனளிப்பதாகவும் ஆய்வறிக்கைகள்  தெரிவித்ததை தொடர்ந்து அந்நிறுவனம் அமெரிக்க மருந்து கட்டுப்பாடு அமைப்பான எப்.டி.ஏ.,விடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. ஒப்புதல் அளிக்கப்பட்டு  தற்போது  அது இரண்டாவது நிறுவனமாக அனுமதி பெற்றுள்ளது.

‘டீன் ஜோன்ஸ் முதல் கேத்தன் சவுகான் வரை’ – இந்தியாவை அதிரவைத்த விளையாட்டு பிரபலங்களின் மரணம்!!

இது குறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் “தடுப்பூசி மருந்தானது மாநிலங்கள் தோறும் முழுமையாக சென்றடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக அவசரகால தேவைக்கு இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படும” என் தனது ட்விட்டர் தெரிவித்திருந்தார்.

பைசர் நிறுவனத்தை மருந்தினை 75% டிகிரியில் பாதுகாக்க வேண்டுமெனவும், இந்த மருந்தினை 20% டிகிரியிலேயே பாதுகாக்க முடியும் எனவும் , அதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 1500 ரூபாயாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here