Thursday, May 2, 2024

வரதட்சணை கொடுமைக்கான தண்டனை இனி 10 ஆண்டுகள் – சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!!!

Must Read

இன்று சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டார், அதில் வரதட்சணை கொடுமைக்கான தண்டனை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக மாற்றப்பட அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற கூட்டம்:

கடந்த திங்கள்கிழமையில் இருந்து தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இன்று சட்டமன்ற கூட்டம் நடைபெறும் கடைசி நாளாகும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

tn assembly
tn assembly

அதில் எதிர்க்கட்சியான தி.மு.க கட்சியின் தலைவர் ஸ்டாலின் பல காரசாரமான கேள்விகளை கேட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். நேற்றைய கூட்டத்தில் மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக இன்று ஏற்றுக்கொண்டனர்.

பல அறிவிப்புகள்:

இன்றைய கூட்டத்தில் முதல்வர் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறிருந்தாவது,

  • வரதட்சணை கொடுமைக்கான தண்டனை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குற்றத்திற்கான ஆயுள் காலம் 7 ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • பாலியல் தொழிலுக்காக சிறுவர் சிறுமிகளை ஈடுபடுத்தினாலோ அல்லது அவர்களை பயன்படுத்த வாங்கினாலோ 7 ஆண்டுகள் சிறை.
  • பெண்களை அவர்கள் போகும் இடத்திற்கு சென்று பின் தொடரந்தால் 7 ஆண்டுகள் சிறை. ஏற்கனவே, இந்த குற்றத்திற்கான தண்டனை காலம் 5 வருடங்களாக இருந்தது.
  • 18 வயதிற்கு கீழ் உள்ள ஆண் மற்றும் பெண்பிள்ளைகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயற்சித்தால் ஆயுள் தண்டனை வழங்கபடும்.

இதனை தொடர்ந்து பல காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!

ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -