5 மாவட்டங்களில் கொரோனா உச்சத்தை தொடும் – தலைமை செயலாளர் எச்சரிக்கை!!

0
Corona
Corona

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என தலைமை செயலாளர் சண்முகம் எச்சரித்து உள்ளார். இதனால் அந்த மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் இதுவரை 4,80,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 8,090 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 4,23,231 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 49,203 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் சராசரியாக 6000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் வழங்கப்பட்டு உள்ள அதிகப்படியான தளர்வுகளே பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

k shanmugam IAS
K Shanmugam IAS

பசு இறைச்சிக்கு தடை – இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!!

இது குறித்த கேள்விக்கு தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் பதில் அளித்துள்ளார். அதாவது அடுத்து வரும் 15 நாட்களில் கோவை, திருவண்ணாமலை, நாகை, கடலூர் மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சம் தொடும் என தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். அம்மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here