Friday, May 3, 2024

பசு இறைச்சிக்கு தடை – இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!!

Must Read

இலங்கையில் இனி இறைச்சிக்காக பசுக்களை வெட்டக் கூடாது என்ற தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் அங்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீர்மானம்:

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மகிந்த ராஜபக்சே இறைச்சிக்காக பசுக்களை கொலை செய்யக் கூடாது என்ற சட்டம் நிறைவேற்றபடும் என்று கூறி இருந்தார். நாடாளுமன்றத்தில் அதற்கான தீர்மானத்தை ஆகஸ்ட் 8 ஆம் தேதி அறிவித்திருந்தார். இந்த முடிவினை ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்.பி.,க்கள் என்று அனைவரும் வரவேற்றனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அதற்கான தீர்மானம் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் உள்ள மதம் மற்றும் கலாச்சார துறையின் அமைச்சர் புத்த சாசன தலைமையில் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அனைவரும் மகிழ்ச்சி:

இது குறித்து மகிந்த ராஜபக்சே கூறுகையில் “புத்த மத மறுமலர்ச்சி கட்சியின் தேசிய தலைவரான அனாகரிகா தர்மபாலா இது குறித்து வலியுறுத்தினார். எங்கள் அரசு தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. புத்த மதத்தினை சார்ந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவர். இதனை சட்டமாக கொண்டு வர எந்த அரசும் முன்வரவில்லை.”

தாய் உதவியுடன் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!!

“அப்படி சாப்பிடவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -