2 நாட்களில் கிடுகிடுவென உயர்ந்த முட்டை விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 50 காசுகள் அதிகரித்து உள்ளது. அதற்கான தேவை அதிகரித்ததே விலை ஏற்றத்திற்கான காரணம் என வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முட்டை விலை:

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல தொழில் துறைகள் நஷ்டமடைந்தன. இதனால் விலைவாசி உயர தொடங்கியது. இதையடுத்து தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. இதனால் நிறுவனங்கள் மீண்டும் முழுவீச்சில் செயல்பட தொடங்கி உள்ளன. இந்நிலையில் நாமக்கல்லில் 2 நாட்களில் மட்டும் 50 முட்டை கொள்முதல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டு 4 ரூபாய் 70 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த மாத தொடக்கத்தில் உற்பத்தி குறைந்து, முட்டைக்கான தேவை அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் முட்டை மண்டலமாக இருக்கும் நாமக்கல் மற்றும் பிற மாநிலங்களில் பெங்களூரு, கொச்சி, மைசூர் உள்ளிட்ட இடங்களிலும் விலை அதிகரித்து உள்ளது.

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை – கவலையில் மக்கள்!!

வட மாநிலங்களில் ஆன்மிக திருவிழாக்கள் முடிவடைந்ததும், கேரளாவில் மீன் பிடி தடைக்கலாம் தொடங்கி இருப்பதே அதன் விலையேற்றத்திற்கு காரணம் என நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்வராஜ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here