Tuesday, April 16, 2024

அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர் – பெருமைபடுத்திய நாசா!!

Must Read

நமது நாட்டை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயர் அமெரிக்க விண்கலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இது அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.

“இந்திய வம்சாவளி பெண்”

இந்தியாவில் உள்ள அனைவரையும் பெருமையடைய வைத்தவர், கல்பனா சாவ்லா. அவர் கடந்த 1962 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற ஊரில் பிறந்தவர். தனது சிறு வயதில் இருந்தே விண்ணில் பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அந்த சிறு வயது கனவை எப்படியேனும் நிறைவேற்ற வேண்டும் என நினைத்தவர் அதற்காக கடினமாக உழைத்தார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

kalapan chawla in childhood
kalapan chawla in childhood

அவரது கனவிற்கு மேலும் தீனி போடும் விதமாக ஒரு முறை ஜெ.ஆர்.டி.டாடா அவர்களை சந்தித்துள்ளார். அவர் இந்தியாவின் தலைசிறந்த விமானஓட்டி மற்றும் தொழில் அதிபர் ஆவார். அவரை பார்த்ததில் இருந்து இவருக்கு விண்ணில் பறக்க வேண்டும் என்று ஆசை அதிகமாக வளர்ந்துள்ளது. அதற்கான தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டும் உள்ளார்.

பெருமைப்படுத்திய நாசா:

அவரது அயராத உழைப்பிற்கு வெற்றியும் கிடைத்தது. அவர் தான் இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை. அவர் மறைந்தும் அவரது புகழ் அனைவர் மனதிலும் உள்ளது. அவர் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் தான் பணிபுரிந்தார். அவரை பெருமைபடுத்த வேண்டும் என்பதற்காக நாசா அவரது பெயரை “நார்த்ரோப் க்ரம்மன்” என்ற விண்கலத்திற்கு சூட்டி உள்ளது.  இந்த விண்கலம் வரும் 29ஆம் தேதி நாசாவின் மிட் அட்லாண்டிக் ஸ்பேஸ்போர்ட்டிலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

சிகிச்சைக்கு பணமின்றி தவித்த வடிவேல் பாலாஜி??

 Northrop Grumman spacecraft
Northrop Grumman spacecraft

இந்த விண்கலம் அமெரிக்க சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழிநுட்ப நிறுவனத்தின் வரத்த கரீதியான விண்கலம் ஆகும். இது குறித்து அந்த நிறுவனம் கூறுகையில் “அவரது பெயரை இந்த விண்கலத்திற்கு வைத்ததில் பெருமிதம் அடைகிறோம். அவர் இந்த துறையில் புரிந்த மகத்தான தொண்டு இன்று வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கல்பனா சாவ்லா அவர்களை நாங்கள் மதிக்கிறோம்.” என்று தெரிவித்தனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPLல் இருந்த சிறிது காலம் ஓய்வு.. இணையத்தில் வைரலாகும் மேக்ஸ்வெல்லின் கருத்து!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். குறிப்பாக கடைசி பந்து வரை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -