Thursday, May 16, 2024

மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம் அதிரடி!!

Must Read

நடப்பாண்டில் மருத்துவ படிப்புகளில் சேர ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக பரபரப்பு தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது.

ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு:

மருத்துவ படிப்புகளில் சேர ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. தற்போது நீட் தேர்வுகள் வெளியாகியுள்ள நிலையில் இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது. ஏற்கனவே இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் அனைவரும் எழுத்து பூர்வமாக தங்களது பத்திகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து கேவியட் மனுதாரர் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் கடந்த 21 ஆம் தேதி பதிலை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்தார். கடந்த 22 ஆம் தேதி அதிமுக சார்பில் எழுத்துப்பூர்வ பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு தரப்பு மனுக்களையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டனர். பின், வரும் 26 ஆம் தேதி (இன்று) இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கும் என்று கூறப்பட்டது.

பரபரப்பான தீர்ப்பு:

இதனை தொடர்ந்து இன்று ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தையும் நீதிபதிகள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கூறியதாவது இந்த ஆண்டு தமிழகத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கினால் அது மற்ற மாநிலங்களுக்கு சில சட்ட சிக்கல்களை உருவாக்கும்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதே போல் தனிப்பட்ட முறையில் தமிழகத்திற்கு மட்டும் இது போன்ற உத்தரவை வழங்க முடியாது. அதனால், இந்த ஆண்டு ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது. இவ்வாறாக அவர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இவ்வாறாக தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -