பெட்ரோல் விலை குறைப்பு & நகைக்கடன் தள்ளுபடி – தெறிக்கவிடும் திமுக தேர்தல் வாக்குறுதிகள்!!

0

திமுக தலைவர் ஸ்டாலின் பெட்ரோல் மற்றும் பால் விலை குறைப்பு, மக்களின் நகைக்கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்து அசத்தியுள்ளார்.

ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். இது மக்களை கவரும் வண்ணத்தில் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையிலும் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஏழைகளின் பசியை போக்கும் வகையில் முதல் கட்டமாக 500 கலைஞர் உணவகம் திறக்கப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஆட்டோ ஓட்டுனருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.10,000 மானியமாக வழங்கப்படும். ஏழை, எளிய சிறு வணிகர்களுக்கு ரூ.15,000 வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். கூட்டுறவை நகை கடனில் சுமார் 5 பவுன் வரை உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலும் கொரோனா காலத்தில் தனது வாழ்வாதாரத்தை இழந்த அரிசி அட்டை குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும்.

ஸ்டாலினுக்கு என்ன ஜோசியமா தெரியும் – கடுமையாக சாடிய இபிஎஸ்!!

மேலும் தமிழக மக்களின் நலன் கருதி பெட்ரோல் விலையில் ரூ.5 மற்றும் டீசல் விலையில் ரூ.4 லிட்டருக்கு குறிக்கப்படும் என்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் ஜூன் மாதம் 3ம் தேதி முதல் சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும். மேலும் வருகிற கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆவின் பால் ரூ.3 குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here