Monday, April 29, 2024

இலங்கை அருகே இந்தியாவிற்கு வரவிருந்த கப்பலில் மீண்டும் தீ – அணைக்கும் பணிகள் தீவிரம்!!

Must Read

பனாமா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீண்டும் தீ பிடித்துள்ளதால் அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் இந்திய கடற்படையும் கைகோர்த்துள்ளது.

கச்சா எண்ணெய் கப்பல்:

கடந்த சில நாட்களுக்கு முன் பனாமா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ‘நியூ டைமண்ட்’ என்ற கப்பல் 2.70 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை சுமந்து வந்தது. இது குவைத் நாட்டில் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய வந்த இந்த கப்பல் கடந்த 3ஆம் தேதி இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் திடிரென்று தீ பற்றி எரிந்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

fire on oil tanker ship
fire on oil tanker ship

இதனால் கப்பலில் இருந்த தலைமை மாலுமி ஒருவர் பலியானார். 19 பேர் கப்பலில் இருந்து மீட்கப்பட்டனர். இந்தியாவின் கடற்படை மற்றும் விமானப்படை அங்கு சென்று தீயினை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பின், இந்த தீ ஒரு வழியாக ஞாயிற்றுக்கிழமை அணைக்கப்பட்டது. இதனால் கடலுக்கு ஏற்பட இருந்த சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கருதப்பட்டது.

மீண்டும் பரவிய தீ:

ஆனால், மீண்டும் கப்பலில் இருந்த தீ பிழம்பு மற்றும் உஷ்ணம் காரணமாக மீண்டும் கப்பலில் தீ பரவி உள்ளது. இதனால், தீயினை அணைக்கும் முயற்சிகளில் இந்திய மற்றும் இலங்கை கடற்படை தீவிரமாக இறங்கியுள்ளது.

கவினை மறைமுகமாக தாக்கிய லாஸ்லியா!!

கப்பலில் மீண்டும் தீ ஏற்பட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -