நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை – அரியலூரில் சோகம்!!

0

தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்விற்கு தயாராகி வந்த 19 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தற்கொலை:

தமிழகத்தில் மாநில கல்வி முறையில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமான ஒன்றாக உள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கும் அளவிற்கு வசதி இல்லாத காரணத்தால் பல மாணவர்கள் தங்களது டாக்டர் ஆக வேண்டும் என்கிற கனவை அடைய முடியாமல் போகிறது. இதனால் பல தற்கொலை சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இம்முறை கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் நீட் தேர்வினை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வரும் செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த விக்னேஷ் எனும் 19 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தன்னார்வலருக்கு உடல்நல குறைபாடு – ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!!

சில நாட்களாக மன உளைச்சலுடன் காணப்பட்ட மாணவர் எலந்தங்குழி கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வால் ஏற்கனவே தமிழகத்தில் 2016ம் ஆண்டு மாணவி அனிதா, 2019ம் ஆண்டு மோனிஷா, ரித்துஸ்ரீ, வைஷியா, இந்த ஆண்டு சுபஸ்ரீ, ஹரிஷ்மா ஆகிய மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் மேலும் ஒரு தற்கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here