Tuesday, April 23, 2024

தன்னார்வலருக்கு உடல்நல குறைபாடு – ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!!

Must Read

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனெகா நிறுவனம் இணைந்து நடத்திய தடுப்பு மருந்து சோதனையில் ஒருவருக்கு உடல் நலகுறைவு ஏற்பட்டதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து:

உலகில் அனைத்து மக்களையும் அதிகமாக அச்சுறுத்தி வருகிறது கொரோனா நோய் தொற்று. இந்த நோய் தொற்றால் தற்போது உள்ள நிலவரப்படி 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பலி ஆகி உள்ளனர். இந்த நோய்க்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வந்ததது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

corona death all over the world
corona death all over the world

முதன்முதலாக தடுப்பூசி சோதனையை பிரபல பிரிட்டன் நிறுவனமான ஆஸ்ட்ரா செனெகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்த திட்டமிட்டது. கொரோனாவிற்கான தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றதும் அனைத்து நாடுகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன.

உடல்நல குறைவு:

அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய தன்னார்வலர்கள் முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பலரும் இந்த சோதனைகளில் பங்கேற்றனர்.

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் Kofta ரெசிபி!!

astrazenca
astrazenca

முதல் இரண்டு கட்ட சோதனைகளும் வெற்றி அடைந்த நிலையில் மூன்றாம் கட்ட சோதனைகளும் நடைபெற்றது. மூன்றாம் கட்ட சோதனையில் தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

“இயல்பு தான்”:

இது குறித்து ஆஸ்ட்ரா செனெகா நிறுவனம் கூறுகையில் “சோதனைகளின் போது இது போல் நிறுத்தி வைப்பது வழக்கம் தான். மிகப்பெரிய அளவில் சோதனைகள் நடத்தபடும் போது இது போல் நிகழ்வது இயல்பு தான்.”

மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்காக – டோல் ஃப்ரீ ஹெல்ப்லைன் “கிரண்” அறிமுகம்!!

corona vaccine
corona vaccine

“மீண்டும் சோதனைகள் நடத்தப்படும். பாதுகாப்பு கருதியும் சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.  அனைவரும் அதிகமாக எதிர்பார்த்த கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மக்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -