தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டு விட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

0

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்துவதற்காக, கடந்த 2023 ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இதுவரையிலும் சுமார் 2 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்ததில் 80,000 பேருக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனாலும் தேர்தல் நடத்தை விதி உள்ளிட்ட சில காரணங்களால் ரேஷன் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது. இதனால் ரேஷன் பொருள், பொங்கல் பரிசு உள்ளிட்ட பல்வேறு சலுகை பெற முடியாமல் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “ஓராண்டுக்கு மேலாகியும் புதிய கார்டு வராமல் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டால் தேர்தல் நடத்தை விதி என பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். சிறப்பு அனுமதி பெற்று கார்டை தருமாறு கேட்டால் ‘புதிய கார்டு இனி கிடைக்காது’ என்கின்றனர். எனவே ரேஷன் கார்டு கிடைக்குமா? அல்லது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டதா? என்பதை அரசு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.” என கோரிக்கை வைத்துள்ளார்.

 Enewz Tamil டெலிக்ராம்

மஞ்சுமெல் பாய்ஸ்  தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு.. வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here