Thursday, May 2, 2024

வாரத்தின் முதல் நாளே அதிரடியாக உயர்ந்த தங்க விலை – அச்சத்தில் மக்கள்!!

Must Read

வாரத்தின் முதல் நாள் தங்க விலை சற்று குறையும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்து மக்களை கதி கலங்க வைத்துள்ளது. சுப நிகழ்ச்சிகளை அடுத்து வரும் நாட்களில் நடத்தலாம் என்று எண்ணியவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

தங்க விலை ஏற்றம்:

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி என்றால் தனி மோகம் தான். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கம் வாங்குவதில் அதிகமான ஆர்வத்தினை காட்டுவர். அப்படி இருக்க தங்கம் மற்றும் வெள்ளி விலை தினமும் பங்குச் சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுதல் அடையும். இந்தியாவில் கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தடாலடியாக உயர்ந்து வந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தொழில் முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ததால் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை அதிகரித்து விலை நிலவரத்தை அதிகரிக்க வைத்தது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த கவலை அடைந்தனர். இந்த மாதம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இரண்டுமே தடாலடியாக உயர்ந்து வந்தது. பண்டிகை காலம் நெருங்கியதால் மூன்று நாட்கள் அதிரடியாக குறைந்து வந்த தங்க விலை வாரத்தின் முதல் நாளான இன்று உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்:

இன்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.38,568 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.38 ரூபாய் உயர்ந்து ரூ.4,821 ஆக விற்பனை ஆகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தூய தங்கம் (24 கேரட்) ஒரு கிராம் ரூ.5,201 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு சவரன் ரூ.41,608 என்று விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் அதிகரித்து ரூ.68.40 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 68,400 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

5, 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த புதிய சிக்கல்., டிசி கிடைப்பதில் தாமதம்? கர்நாடகாவில் பரபரப்பு!!!

கர்நாடகாவில் 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு போல, 5, 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என அம்மாநில அரசு மும்முரமாக செயல்பட்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -