Sunday, May 5, 2024

ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்திய சசிகலா – விரைவில் விடுதலை??

Must Read

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனையினை அனுபவித்து வரும் சசிகலா தற்போது நீதிமன்றம் விதித்த அபராத தொகையான 10 கோடிக்கான காசோலையினை வழங்கியுள்ளார். சிறையில் அவரது நன்னடத்தை மற்றும் விடுமுறை கால சலுகை உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் முன்கூட்டியே வெளிவருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கு:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இருவர் பல சொத்துக்களை அதிகபட்சமாக குவித்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெங்களூர் நீதிமன்றம் சார்பில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராத தொகையாக 10 கோடி ரூபாயும் விதிக்கப்பட்டது. இதனை அடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால் அவரது தோழியான சசிகலா தற்போது பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 2022 ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தண்டனை காலம் விதிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், சிறைச்சாலையில் அவரது நன்னடத்தை மற்றும் விடுமுறை சலுகை காலம் காரணமாக அவர் முன்கூட்டியே சிறையில் இருந்து வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சசிகலா சார்பில் வழக்கில் வாதிட்ட வழக்கறிஞர் நீதிபதி சிவப்பா, அபராத தொகையாக விதிக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய்க்கான காசோலையினை வழங்கியுள்ளார். அவர் கூடிய விரைவில் சிறையில் இருந்து வெளிவருவதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

sasikala in bangalore prison
sasikala in bangalore prison

அவர் வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து வெளி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிகிறது. அவ்வாறாக அவர் வெளி வந்தால் தமிழக அரசியல் சூழலில் பெரும் மாற்றம் மற்றும் பரபரப்பு ஏற்படும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -