புற்றுநோய் பாதித்த துணைநடிகர் தவசி – சிலம்பரசன் ரூ.1 லட்சம் நிதியுதவி!!

0

துணை நடிகர் தவசிக்கு தொடர்ந்து ஆதரவுகள் குவிந்த வண்ணம் உள்ளன. உணவுக்குழாயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட துணை நடிகர் தவசிக்கு மதுரை சரவணா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர். சரவணன் இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார். தற்பொழுது, நடிகர்கள் அவரது சிகிச்சைக்கு தொடர்ந்து நிதியுதவி செய்து வருகின்றனர்.

துணைநடிகர் தவசிக்கு தொடர்ந்து பல நடிகர்கள் நிதியுதவி:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், களவானி, சுந்தரபாண்டியன், ஜில்லா, வீரம், நான் கடவுள் போன்ற படங்களில் நடித்து தன் கதாபாத்திரத்தை அழகாக வெளிப்படுத்தியவர் துணைநடிகர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தான் நம் அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தார். நடிகர் சூரிக்கு அப்பாவாக “கருப்பன் குசும்புக்காரன்” என்ற வசனம் மூலம் பிரபலமானவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சற்றும் எதிர்பாராத விதமாக மக்களை அதிர்ச்சியூட்டும் அளவிற்கு புற்றுநோயால் பாதிக்கபட்டு உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் தனது மருத்துவமனையில் துணை நடிகர் தவசிக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார். டாக்டர் சரவணனின் மனப்பான்மையை மக்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் பாராட்டியுள்ளனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

துணை நடிகர் தவசி தனது சிகிச்சைக்கு உதவுமாறு திரைத்துறையினரை கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில், ‘மக்கள் செல்வன்’ நடிகர் விஜய்சேதுபதி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் தலா 25,000 ரூபாய் கொடுத்துள்ளனர். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு, துணை நடிகர் தவசிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். இப்பணத்தை வங்கியின் மூலம் பரிவர்த்தனை செய்துள்ளார். தொடர்ந்து நடிகர்களின் ஆதரவு துணைநடிகர் தவசிக்கு கிடைத்துள்ளது. இந்த சிகிச்சையில் இருந்து மீண்டு திரையுலகில் மக்களை மகிழ்ச்சி அடைய வைக்க துணை நடிகர் தவசி வர வேண்டும் என்றும் நாம் அனைவரும் கடவுளை பிரார்த்தனை செய்து கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here