#SAvsPAK டெஸ்ட் தொடர் – பாகிஸ்தான் அபார வெற்றி!!

0

தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்:

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்ரிக்கா அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி 20 தொடரை பங்கேற்க உள்ளது. முதலாவதாக இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது. முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்து வருகிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக எல்கர் 58 ரன்களை குவித்துள்ளார். பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பிறகு பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. தென் ஆப்ரிக்காவின் பந்து வீச்சை பாகிஸ்தான் அணி அடித்து துவம்சம் செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் பாகிஸ்தான் அணி 378 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அலம் சதத்தை பதிவு செய்து அசத்தினார். அவர் 109 ரன்களும், அசார் அலி 51 ரன்களையும் குவித்துள்ளனர். தென் ஆப்ரிக்கா அணி தரப்பில் ரபாடா மற்றும் மகாராஜ் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

மும்பையில் புறநகர் மின்சார ரயில் சேவை – பிப்ரவரி முதல் இயக்கம்!!

158 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. இரண்டாவது இன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கில் திணறி வந்தது. இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 74 மற்றும் ராஸி வான் டெர் டுசென் 64 ரன்களை குவித்துள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் நாமன் அலி அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

பாகிஸ்தான் அபார வெற்றி:

முடிவில் தென் ஆப்ரிக்கா அணி பாகிஸ்தான் அணிக்கு 88 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதன்பிறகு தனது ஆட்டத்தை துவக்கிய பாகிஸ்தான் அணி பொறுமையாக விளையாடி வந்தது. முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்களை இழந்து 90 ரன்களை குவித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அசார் அலி 31 மற்றும் அலம் 4 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 4ம் தேதி துவங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here