‘தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் குறைந்தாலும் பரிசோதனை குறைக்கப்படவில்லை’ – முதல்வர் பேட்டி!!

0

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கொரோனா பரிசோதனை தமிழகத்தில் குறைக்கப்படவில்லை என தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ஊரடங்கிலிருந்து தளர்வு நிலைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்துள்ள பட்சத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த மாதத்திற்கான ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவு பெரும் நிலையில் தளர்வுகள் பற்றி முடிவு எடுக்க ஒவ்வொரு மாவட்டத்தின் ஆட்சியாளர்களுடன் இன்று தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சித்ராவின் ‘கால்ஸ்’ திரைப்பட மிரட்டலான டீசர் வெளியீடு – கண்கலங்கிய ரசிகர்கள்!!

ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசிய போது,’ தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 4,629 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மற்ற மாநிலங்களில் கொரோனா பரிசோதனை குறைக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் பரிசோதனைகள் முன்பு போல நடந்து வருகிறது. தமிழகத்தை முன்னுதாரணமாக வைத்து பிற மாநிலங்களிலும் பரிசோதனை மேற்கொள்ள பிரதமர் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மணடலத்திற்கும் ஒவ்வொரு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு கொரோனா நிலைமைகள் கண்காணிக்கப்படுகின்றன. தொடர்ந்து தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’ என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here