சையது முஷ்டாக் அலி கோப்பை – இறுதி சுற்றில் நுழையும் தமிழக அணி!!

0

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது அரை இறுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் முதல் அரை இறுதி சுற்றில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் அணி விளையாடியது. இதில் தமிழ்நாடு அணி தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

சையது முஷ்டாக் அலி:

உள்ளூர் போட்டியான சையது முஷ்டாக் அலி கோப்பை டி 20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்றுகள் மற்றும் காலிறுதி சுற்றுகள் முடிவடைந்துள்ளது. மேலும் இன்று முதல் அரை இறுதி சுற்று தொடங்கியுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டி இன்று பிற்பகல் 12 மணி அளவில் தொடங்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் பரத் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் தந்தார். பின்பு ராஜஸ்தான் அணி தமிழ்நாடு அணியின் பந்து வீச்சை பொறுமையாக சந்தித்து வந்தது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 154 ரன்களை குவித்து 9 விக்கெட்களை இழந்துள்ளது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் மெனரியா அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். இவர் 51 ரன்கள் மற்றும் குப்தா 45 ரன்களை குவித்துள்ளார்.

பைனலில் தமிழ்நாடு:

தமிழ்நாடு அணி சார்பில் முகமத் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 155 ரன்களை வெற்றி இலக்காக வைத்து களமிறங்கிய தமிழ்நாடு அணி இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. குறிப்பாக தமிழ்நாடு அணியின் பேட்ஸ்மேன் அருண் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 18.4 ஓவர் முடிவில் தமிழ்நாடு அணி 3 விக்கெட்களை இழந்து 158 ரன்களை குவித்து தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆரவாரம் – பிப்ரவரி 1 வரை ஒத்திவைப்பு!!

தமிழ்நாடு அணி சார்பாக அருண் கார்த்திக் 89 ரன்களும் தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி இந்த தொடருக்கான பைனலுக்கு முன்னேறியுள்ளது. வரும் 31ம் தேதி அன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு அணியுடன் மோதும் அணி யார் என்பது 2 வது அரை இறுதி சுற்றின் முடிவில் தான் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here