நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆரவாரம் – பிப்ரவரி 1 வரை ஒத்திவைப்பு!!

0

இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் கட்டமாக இன்று முதல் வரும் 15ம் தேதி வரை நடக்கும் என்று அறிவித்திருந்தனர். இதில் இன்று எதிர்க்கட்சிகள் ஆரவாரத்தில் ஈடுபட்டார்கள். எனவே மக்களவையை ஒத்திவைத்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: 

தற்போது கொரோனா காலத்திலும் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரை இன்றும் முதல் துவக்கினார். இரண்டு கட்டமாக இந்த கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்டிருந்தனர். முதல் கட்ட கூட்டத்தொடர் இன்றும் முதல் வரும் 15ம் தேதி வரை நடக்கவுள்ளது. மேலும் 2ம் கட்ட தொடர் வரும் மார்ச் மாதம் 8ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் வரும் 1ம் தேதி அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கூட்டத்தொடர் முதல் நாளில் குடியரசு தலைவர் தனது உரையுடன் துவக்கினார். ஆனால் குடியரசு தலைவரின் உரையை 16 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தனர். காரணம் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். பின்பு ஓம் பிர்லா தலையில் மக்களவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2020 மற்றும் 2021ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

சித்ராவின் ‘கால்ஸ்’ திரைப்பட மிரட்டலான டீசர் வெளியீடு – கண்கலங்கிய ரசிகர்கள்!!

கொரோனா ஊரடங்கில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்த தகவல்களை புள்ளி விவரங்களுடன் தாக்கல் செய்யும் போது எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் கூச்சல் எழுப்பி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பியதால் மக்களவை கூட்டத்தை வரும் 1ம் தேதி அன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்போவதாக அவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here