பொறியியல் இணையவழி தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

0

பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் இணையவழியாக நடத்தப்படவுள்ளன. இந்த தேர்வுக்கான தேர்வு எழுதும் வழிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

தேர்வில் கட்டுப்பாடுகள்

பொறியியல் கல்லூரிமாணவர்களுக்கு கடந்த ஆண்டுக்கான தேர்வுகள் தற்போது இணையவழியாக நடத்தப்படவுள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. பொறியியல் மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் டிசம்பரில் நடைபெற இருந்தது. தற்போது இந்த தேர்வுகள் பெப்ரவரி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தேர்வுக்கான அட்டவணையை கடந்த 15 ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது.

அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் – வானிலை மையம் தகவல்!!

வரும் பெப்ரவரி 1 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை பி.இ, பி.ஆர்க்கி டெக், பி. டெக் ஆகிய படிப்புகளுக்கான தேர்வுகள் நடக்கப்படவுள்ளன. இதற்கு முன்னாக இணையவழியில் நடைபெற்ற தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததை கருத்தில் கொண்டு தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்கள் தங்களது அடையாள அட்டையை வைத்து பதிவு செய்து கொள்ளவேண்டும். மாணவர்கள் தங்கள் உபயோகப்படுத்தும் லேப்டாப், செல்போன் ஆகிய உபகரணங்களை ஏற்கனவே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் வெப் கேமராவில் முகம் தெரிந்துகொண்டே இருக்கவேண்டும், ஏ 4 காகிதங்களை பயன்படுத்தவேண்டும், முகக்கவசங்கள் அணிந்து கொள்ளகூடாது, எக்காரணம் கொண்டும் தேர்வு எழுதி முடிக்கும் வரையிலும் மாணவர்கள் எழுத்து செல்லகூடாது, கேள்விகளை சத்தமாக வாசிக்கக்கூடாது என்ற நெறிமுறைகளை விதித்துள்ளனர். இதனை மீரும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here