சிக்கன் மூலம் பறவைக் காய்ச்சல் பரவுமா?? மத்திய அரசு விளக்கம்!!

0

தற்போது இந்தியாவில் சில மாநிலங்களில் பறவை காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இது குறித்து மக்களுக்கு இந்தியா உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஓர் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இதன் மூலம் பறவை காய்ச்சல் பரவாது என்றும் தெரிவித்துள்ளது.

பறவை காய்ச்சல்:

மத்திய பிரதேஷ், ஹரியானா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேஷ், உத்தர பிரதேஷ், குஜராத், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வரும் பறவைகள் மற்றும் காகங்களிடையே ‘ஏவியன் இன்ப்ளூயன்சா’ என்னும் பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டிருப்பதை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக இதில் 9 மாநிலங்களில் பண்ணைகளில் இருக்கும் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளதாக நேற்று முன்தினம் மத்திய அரசு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்:

தற்போது இது குறித்து இந்தியா உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஓர் தகவலை வெளியிட்டுள்ளது. அதுஎன்னவென்றால்,”மக்கள் யாரும் இந்த பறவை காய்ச்சலை எண்ணி அச்சப்பட வேண்டாம். இறைச்சிகள் மற்றும் முட்டைகளை நன்கு சமைத்து சாப்பிட்டால் பறவை காய்ச்சல் மனிதர்களிடம் பரவாது என்று உலக சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் கோழிகளை சமைக்கும் போது கண்டிப்பாக கையுறை அணிய வேண்டும். மேலும் முட்டையை பாதி வேக வைத்து உண்பதை மக்கள் அனைவரும் கண்டிப்பான முறையில் தவிர்க்கவேண்டும். முழுவதுமாக வேகவைத்து உண்பதே சிறந்தது.

மேலும் இறைச்சியை விற்கும் வர்த்தகர்கள் மற்றும் வீட்டில் சமைப்பவர்கள் அனைவரும் சில பாதுகாப்பான விஷயங்களை செய்ய வேண்டும். இறைச்சிகளை சமைப்பதற்காக கழுவும் பொழுது கண்டிப்பாக கையுறை அணிந்திருக்க வேண்டும். மேலும் குழாய் தண்ணிர் மூலம் இறைச்சியை கழுவ கூடாது, காரணம் அதில் படும் தண்ணீர் வெளியில் உள்ள பாத்திரங்களில் பட்டால் தொற்று பரவ கூடும்.

தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

எனவே கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து இரஃய்ச்சிகளை கழுவ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இறைச்சிகள் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மற்றும் கத்திகளை சானிடைஸிர் மூலம் கழுவ வேண்டும். மேலும் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் கோழிகள் மற்றும் முட்டைகளை வாங்க கூடாது என்று அறிவித்துள்ளனர். இவ்வாறு செய்முறையை செய்தால் பறவை காய்ச்சலை மனிதர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here