தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

0

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

வாஷிங்டன் சுந்தர் நியமனம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்களிடையே தேர்தலின் முக்கியத்துவம் குறித்தும் வாக்குகள் அளிப்பது மக்களின் உரிமை என்பதையும் குறித்து நினைப்பூட்டுவதற்காக தேர்தல் தூதராக பிரபலமான ஒருவரை நியமிப்பது வழக்கம். தற்போது நடக்கவுள்ள இந்த சட்டமன்ற தேர்தலில் இந்த பொறுப்புகளை வாஷிங்டன் சுந்தர் ஏற்கவுள்ளார் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடந்து முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த 21 வயதான இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்டில் 4 விக்கெட்டுகள் மற்றும் 62 ரன்கள் எடுத்தும், இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்கள் எடுத்தும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். போட்டி முடித்து சென்னை திரும்பிய அவருக்கு மக்கள் மத்தியில் விமரிசையான வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் ரீசன்ட் போட்டோ ஷூட் – வைரலாக்கும் ரசிகர்கள்!!

தற்போது நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் இளம் தேர்தல் தூதராக வாசிங்டன் சுந்தரை நியமித்துள்ளது சென்னை மாநகராட்சி. சென்னையிலுள்ள 16 தொகுதிகளிலும் உள்ள இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்ய ஊக்குவிப்பதற்காக சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுகளிலும் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்கவுள்ளார் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here