எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவம் – விரட்டியடித்த இந்திய வீரர்கள்!!

0

எல்லையில் மீண்டும் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனை கவனித்த இந்திய ராணுவத்தினர் அவர்களை விரட்டி அடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

ராணுவம்:

கடந்த சில மாதங்களாகவே சீன ராணுவம் நம் எல்லைக்குள் அத்துமீறி வருவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். கடந்த மே மாதம் முதல் கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவம் தொடர்ந்து மோதி வருகின்றனர். இதற்காக பலவேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்தும் அதற்கு பலனில்லாமல் போய்விடுகிறது. இது போல் அத்துமீறல்கள் நடைபெறாமல் இருப்பதற்காக இந்திய ராணுவத்தினர் எல்லையில் 50 முக்கிய பகுதிகளில் ராணுவத்தினரை குவித்துள்ளது. இதேபோல் சீன ராணுவமும் எல்லையில் தங்கள் நாட்டு ராணுவத்தினரை குவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஊடுருவிய சீன வீரர்கள்:

இதனால் அனைத்து நேரங்களிலும் எல்லையில் பதட்டம் நிலவிக்கொண்டே இருக்கும். இதனை சமாளிக்கும் வகையில் இரு நாட்டுக்கும் இடையே சுமார் 9 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது சிக்கிம் மாநிலத்தில் சீன ராணுவத்தினர் மீண்டும் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 3 தினங்களுக்கு முன்பாக வடக்கு சிக்கிம் மாநிலத்தில் உள்ள Naku La என்னும் சீன எல்லை பகுதியில் இந்தியா ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் ரீசன்ட் போட்டோ ஷூட் – வைரலாக்கும் ரசிகர்கள்!!

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சீன ராணுவத்தினர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயல்வதை இந்தியா ராணுவத்தினர் கண்டனர். உடனே அதை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா வீரர்கள் விரைந்தனர். அப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு நடுவுவே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இறுதியில் இந்தியா வீரர்கள் சீன வீரர்களை விரட்டி அடித்தனர். மேலும் ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 20 பேருக்கு காயமும் மற்றும் இந்தியா வீரர்களுக்கு 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக இந்தியா ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here