பாலிவுட்டில் கத்ரீனாவுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
பிரபல விஜய் சேதுபதி பட பாடலாசிரியர் திடீர் மறைவு - மாரடைப்பால் உயிரிழந்த சோகம்!!
பிரபல விஜய் சேதுபதி பட பாடலாசிரியர் திடீர் மறைவு - மாரடைப்பால் உயிரிழந்த சோகம்!!

கோலிவுட் மற்றும் டோலிவுடை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஹீரோவாக கால் பதிக்கிறார். பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக  பிரபல ஹிந்தி நடிகை காத்ரீனா கைப் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி:

நடிகர் விஜய் சேதுபதி தமிழில் சிறு சிறு வேடங்களில் நடித்து இன்று ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார். ஹீரோவாக மட்டுமல்லாமல் குணச்சித்திரம், வில்லன் என இவர் வெரைட்டியாக நடித்து வரும் இவர் தற்போது தமிழ் படங்கள் மட்டுமல்லாது பிற தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் இவர் வில்லனாக நடித்து வெளியான உப்பண்ணா திரைப்படம் அங்கு மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது.

விஜயுடன் மீண்டும் இணையும் பிரபலம் – தளபதி 65 அப்டேட்!!

இதை தொடர்ந்து விஜய் சேதுபதி இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மும்பைகார் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் ரீமேக்கான இந்த படம் முடிந்ததும் பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்த்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இவருக்கு ஜோடியாக நடிகை கத்ரீனா கைப் நடிக்கவிருக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த புதிய படத்திற்கு “மெர்ரி கிறிஸ்துமஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. த்ரில்லர் சஸ்பென்ஸ் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் புனே மற்றும் அதன் சுற்று புறங்களில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here