அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் – தற்காலிக பேருந்து ஓட்டுனரால் நடந்த விபரீதம்!!

0

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் தற்காலிக ஓட்டுனரால் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதில் ஒரு பேருந்து தற்போது விபத்துக்குள்ளாகியது.

போக்குவரத்து ஊழியர்கள்:

போக்குவரத்து ஊழியர்கள் தங்களது ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தற்போது காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் மிக குறைந்த அளவே பேருந்துகள் இயங்குவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இதேபோல் கடலூரில் மொத்தம் 9 பணிமனைகள் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கு மொத்தம் சுமார் 4000 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது வேலை ஊழியர்களின் நிறுத்த போராட்டத்தினால் அங்கு குறைந்த அளவு ஊழியர்களே வேலைக்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை முன்னிட்டு பேருந்தை இயக்க ஒருவர் முன்வந்தார். அவர் ஆட்டோ ஓட்டுனராம். மேலும் அவர் முன்னனுபவம் இல்லாதவர்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் – தொழிற்சங்கம் அறிவிப்பு!!

இந்நிலையில் பேருந்தை இயக்கும் பொழுது அருகில் இருந்த பேருந்தின் மீது வேகமாக மோதியுள்ளார். இதனால் அங்கு விபத்து ஏற்பட்டது. மேலும் தகவல் அறிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அங்குவந்து பொதுமக்கள் உயிருடன் போராட வேண்டாம் என்று முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஊழியர்களை சமாதானம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here