குக் வித் கோமாளியில் அஸ்வினுடன் ஷிவாங்கி செய்த காரியம் – வெறியான பாபா மாஸ்டர்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 1 மற்றும் சீசன் 2 போட்டியாளர்கள் தற்போது களமிறங்கி உள்ளனர். அதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் ரம்யா பாண்டியனை புகழ் ரூட் விட, அந்த பக்கம் ஷிவாங்கி அஸ்வினை கலாய்த்து வருகிறார்.

குக் வித் கோமாளி 2

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது பிரபலமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. மேலும் இந்த வாரம் செலிப்ரேஷன் ரவுண்டு மேலும் கலை கட்டியுள்ளது. இந்த பக்கம் பாபா மாஸ்டர், அந்த பக்கம் வனிதா என ஒரு சமையல் போர்க்களமே உருவாகியுள்ளது.

இம்முறை ரம்யா பாண்டியனுடன் புகழ் ஜோடியாக உள்ளார். மேலும் பாபா மாஸ்டருக்கு எதிர் போட்டியாளராக ரம்யா பாண்டியன் உள்ளார். ஏற்கனவே அண்ணன், தங்கைகள் செய்யும் லூட்டி தாங்க முடியாது. ஷிவாங்கியின் எதிரில் அஸ்வின் வேறு உள்ளார். சொல்லவா வேண்டும்.

தற்போது வெளியான ப்ரோமோவில் ரம்யா பாண்டியன் வழக்கம் போல சமையல் செய்து கொண்டிருக்க குக்கர் விசில் வருகிறது. யாரை பார்த்து விசில் அடிக்கிற என்று ரக்சன் புகழை ஏற்றி விட புகழ் வெகுண்டு எழுந்து குக்கரிடம் சண்டையிடுகிறார். கடைசியில் குக்கர் வெடித்தது தான் மிச்சம்.

இந்த டாஸ்கில் அனைவரின் கண்ணும் கட்டப்பட்டிருந்தது. புகழ் தான் இப்படி என்றால் அஸ்வின் பார்ட்னர் என்று கத்த ஷிவாங்கி ஓடி போய் அஸ்வினிடம் டான்ஸ் ஆடுகிறார். யார் அது என்று அஸ்வின் கத்த அந்த பக்கத்தில் பாபா மாஸ்டர் ஷிவாங்கியை காணாமல் கத்த மறுபடியும் ஓடி வந்து விடுகிறார் ஷிவாங்கி.

பாபா மாஸ்டர் இதனை கண்டுபிடித்து விட இடமே ரணகளமாகிறது. இந்த வார குக் வித் கோமாளி அல்டிமேட்டாக இருக்க போகிறது என்று மட்டும் தெரிகிறது. வனிதா வேறு இந்த வாரத்தில் களமிறங்கியுள்ளார். நாளுக்கு நாள் குக் வித் கோமாளியின் ரசிகர்களும் அதிகமாகிக்கொண்டு தான் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here