விஜயுடன் மீண்டும் இணையும் பிரபலம் – தளபதி 65 அப்டேட்!!

0

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி தற்போது தனது 65வது படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 65:

சினிமா உலகின் மிக முக்கிய இடத்தை பிடித்தவர் தான் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் அனைத்து தரப்பிலும் ஹிட் ஆனது. மேலும் இந்த படம் புதிய வசூல் சாதனையையும் செய்துள்ளது. தளபதி படம் என்றாலே அது வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது இந்த படத்தை தொடர்ந்து தளபதி தனது 65வது படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் தனது முழு வித்தையையும் அனிருத் இறக்கியுள்ளார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்ததில் ரசிகர்கள் செம குஷி ஆகியுள்ளனர். தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தை மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்தார்.

தல அஜித்தின் சைக்கிள் ரைடு புகைப்படங்கள் – இணையத்தில் வைரல்!!

தற்போது நண்பன் படத்திற்கு பிறகு தளபதி 65ல் விஜயுடன் இணையவுள்ளார். தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த மனோஜ் பரமஹம்சா, நாட்டில் அனைவராலும் விரும்பப்படும் உன்னத மனிதருடன் இணைவது மிக்க மகிழ்ச்சி. நண்பன் படத்திற்கு பின்பு இந்த படத்தை ஒளிப்பதிவு செய்வதற்கு ஆர்வமாக உள்ளேன். மேலும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here