‘கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு உதவியோ, விடுமுறையோ கிடையாது’ – மாநில அரசு அதிரடி!!!

0
covid-19 coronavirus vaccination concept

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
முன்கள பணியாளர்கள் பலரும் தடுப்பூசி எடுத்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவதை தொடர்ந்து “தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு சிகிச்சைக்கு விடுமுறையோ, உதவியோ வழங்கப்பட மாட்டாது” என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநில அரசு:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தற்போது துவங்கபட்டுள்ளது. கடந்த ஜனவரி 6ம் தேதியன்று மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், சுகாதார ஊழியர்கள், காவல் துறையினர், ராணுவத்தினர் என சுமார் 3 கோடி முன்களப்பணியாளர்களுக் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படவிருக்கிறது.

அமமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் – சசிகலாவின் நிலைப்பாட்டினை அறிய தொண்டர்கள் ஆர்வம்!!

இந்நிலையில் நாடெங்கிலும் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு சுகாதார பணியாளர்களே தயக்கம் காட்டிவருவதால் பஞ்சாப் மாநில அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அம்மாநில சுகாதார துறை அமைசர் பல்பீர் சிங் சித்து வெளியிட்ட அந்த அறிவிப்பில் ” பஞ்சாபில் தற்போது கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மாநிலம் முழுவதும் இரண்டாம் அலைக்கு தயாராகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சைக்கான உதவியோ விடுமுறையோ வழங்கப்படமாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும், நாடெங்கிலும் கொரோனா பரிசோதனைகளையும், தடுப்பூசி போடும் பணியையும் விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தற்போது மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் நிலையில் பஞ்சாப் அரசும் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்க அனைவரும் தடுப்பூசி போட்டுகொள்வது அவசியம் என்று அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here